வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானத்தை குவிக்கும் பிரபலங்களில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
சமூக வலைதளமான “இன்ஸ்டாகிராம்” பயன்படுத்துவோர் கணக்கு துவங்கி போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து கருத்தியலை வெளியிட்டு பதிவேற்றி வருகின்றனர். இவர்களை பின் தொடர்வோர் அதிக எண்ணிக்கையிலும் உள்ளனர். இவர்கள் பகிரும் சில பதிவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பெற்று வருமானமும் கிடைக்கும்.
![]() |
அந்த வகையில் இன்ஸ்டா மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் குறித்து ஹாப்பர் ஹெச்.க்யூ எனும் நிறுவனம் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு பிரபலங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதில் முதலிடத்தில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோவை 59,68,48,846 பேர் பின்தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவுக்கு ரூ.26.76 கோடி வருமானம் ஈட்டுகிறார். இரண்டாவது இடத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸியை 47,92,68,484 பேர் பின் தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவுக்கு ரூ.21.49 கோடி வருமானம் ஈட்டுகிறார். மூன்றாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியை, 25,52,69,526 பேர் பின்தொடர்கின்றனர். ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement