இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா…?
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் இறைவன். இந்த படத்தை என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமது இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வருவதாக சமீபத்தில் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெறுவதில் தாமதமாகி வருவதால், திட்டமிட்டபடி இப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள். தற்போது இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பணிகளில் யுவன் சங்கர் ராஜா தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து பாடல்கள், டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.