புதுடில்லி:தலைநகர் டில்லியில் வெள்ளத் தடுப்புக்கான வழிமுறைகளை ஆய்வு செய்து பரிந்துரைக்க, அனுபவம் வாய்ந்த பொறியாளர்களைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழுவை டில்லி அரசு அமைத்துள்ளது.
புதுடில்லி, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஜூன் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. ஹிமாச்சல் மற்றும் உத்தரகண்டில் பெய்த கனமழையால் யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்நிலையில், ஜூலை 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் டில்லியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து, யமுனையில் ஜூலை 13ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
டில்லி மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. கரையோரத்தில் வசித்த 27,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
பத்து நாட்களுக்கும் மேல் டில்லி மாநகரை வெள்ளம் சூழ்ந்திருந்தது.
இந்நிலையில், எதிர்காலத்தில் டில்லியில் வெள்ளத்தடுப்புக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மூன்று அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கொண்ட குழுவை டில்லி அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு வெள்ளத் தடுப்-புக்கான நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும்.
இந்தக் குழுவில், மத்திய பொதுப்பணித் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குனர் எம்.சி.டி. பரேவா, ஐ அண்ட் எப்.சி.,யின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள் — வி.பி.எஸ். தோமர் மற்றும் வி.கே. ஜெயின் –ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு டில்லி மாநகரில் விரிவான ஆய்வு செய்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement