சென்னை: நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிவராஜ்குமார். இவரது நடிப்பு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் சில நிமிடங்களே வந்தாலும் இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் மிரட்டலான கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரில் இவரை பார்க்க முடிந்தது. {image-screenshot821221-1691852869.jpg
