பெங்களூரு கர்நாடக முன்னாள் அமைச்சர் சோமண்ணா சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பாஜகவே காரணம் எனக் கூறி உள்ளார். நேற்று முன்னாள் கர்நாடக அமைச்சர் சோமண்ணா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சோமண்ணா, “நான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டேன்.அதில் ஒரு தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மற்றொரு தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தேன். நான் அந்த 2 தொகுதிகளிலும் எப்படி தோற்கடிக்கப்பட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். எனது தோல்விக்கு பாஜகவினரே காரணம். […]