சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் 27 வயதான வடமாநில இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பயணச்சீட்டுப் பரிசோதகர் அக்ஷயா என்பவர், அந்த வடமாநில இளைஞரிடம் நடைமேடை டிக்கெட் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இளைஞர், தான் ரயில்வே எல்லையை ஒட்டியப் பகுதியில்தான் நின்றதாகவும், தன்னிடம் அபராதம் செலுத்துவதற்குப் பணம் ஏதுமில்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அந்த இளைஞரைப் பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அக்ஷயா, அவரிடம் தொடர்ந்து விசாரித்திருக்கிறார். அப்போது, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர், “நான் பாலத்துக்குப் பின்னால்தான் நின்று கொண்டிருந்தேன்” என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அக்ஷயா, “உன்னை பாலத்தைத் தாண்டிதானே பிடிச்சேன். எங்க பிடிச்சேன்னு உண்மையைச் சொல்லு… இது எங்க ஊரு. நான் இந்திலாம் பேச முடியாது” என்று கூறிக் கொண்டே, அந்த வடமாநில இளைஞரைப் பளாரென்று கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

ரயில் பயணி ஒருவர், இதை வீடியோவாகப் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. “டிக்கெட் எடுக்கவில்லையென்றால் அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும். அதை அந்த நபர் செலுத்தத் தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து, டிக்கெட் எடுக்கவில்லை என்பதற்காக ஒருமையில் பேசி, தாக்குவது மிகவும் தவறு” என பலரும் பயணச்சீட்டுப் பரிசோதகரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில இளைஞரைத் தாக்கிய பயணச்சீட்டுப் பரிசோதகர் அக்ஷயா, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs