வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: லண்டனில் சொத்து வாங்கிய வழக்கில் காங்., மூத்த தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, 50,க்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமினை ரத்து செய்யக் கோரி, அமலாக்கத்துறை மீண்டும் மனு செய்துள்ளது.
சோனியா மகள், பிரியங்காவின்(47), கணவர், ராபர்ட் வாத்ரா. ரியல் எஸ்டேட் எனப்படும், நிலம், சொத்துகளை வாங்கி விற்கும் தொழிலை, பெரிய அளவில் செய்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், இவர், பிரிட்டன் நாட்டின் தலைநகர், லண்டனில்,ரூ. 17 கோடிக்கு சொத்து வாங்கியதும், பின் அதை கைமாற்றியதும் கண்டறியப்பட்டது. அது குறித்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகிறது.
![]() |
இந்த வழக்கில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, முன் ஜாமின் கோரி, வாத்ரா, டில்லி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி, 2019ம் ஆண்டு ஏப்., 1ல் அவருக்கு, முன்ஜாமின் வழங்கப்பட்டது.அதை எதிர்த்து, மே 24ல், அமலாக்க இயக்குனரகம், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, முன் ஜாமினை ரத்து செய்ய கோரியுள்ளது.’
வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் வாத்ராவுக்கு வழங்கியுள்ள முன்ஜாமினை ரத்து செய்ய கோரி மீண்டும் அமலாக்கத்துறை டில்லி ஐகோர்ட்டில் மனு செய்துள்ளது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுதிர்குமார் ஜெயின் விசாரணையை செப்டம்பருக்கு ஒத்தி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
