டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சுக்காற்று காரணமாக அந்தப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர். இதனால், ஆலையை மூடக்கோரி போராட்டம் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இந்த போராட்டத்தின் 100வது நாள் அன்று பிரமாண்டமாக நடைபெற்ற பேரணி, வன்முறையாக மாறியது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் […]
