கேப்டன் மில்லர் முடியும் முன்பே சத்தமில்லாமல் டீலை முடித்த தனுஷ்: சம்பவம் இருக்கு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

ஜெயிலர் – முதல்வர்கள் கொண்டாடும் வெற்றி- வசூல் ராஜாவான ரஜினி
அந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. கேப்டன் மில்லர் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் செய்த காரியத்தால் கேப்டன் மில்லர் படம் பிளாக்பஸ்டராவதை யாராலும் தடுக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் விதம் தனுஷை வெகுவாக கவர்ந்துவிட்டதாம். இதையடுத்து மீண்டும் அருண் மாதேஸ்வரனுடன் சேர்ந்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.

அந்த படத்தை தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கிறார். தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வுண்டர்பார் நிறுவனத்தை துவங்கினார் தனுஷ்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 3 தான் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்த முதல் படமாகும். கடந்த 2018ம் ஆண்டு வெளியான தனுஷின் மாரி 2 படத்திற்கு பிறகு வுண்டர்பார் நிறுவனம் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

இந்நிலையில் வுண்டர்பார் நிறுவனத்தை மூடிவிட்டார்கள் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் தன் தயாரிப்பு நிறுவனத்தை மூடவில்லை தனுஷ்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்ககும் படத்தை வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிப்பு வெளியிட்டார் தனுஷ். இந்நிலையில் மாரி செல்வராஜ் படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன் படத்தையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம் தனுஷ்.

விஜய்யின் வாரிசு படத்தால் எனக்கு நஷ்டம்: கேரளா விநியோகஸ்தர்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு அண்ணனாக கன்னட நடிகரான சிவராஜ்குமார் நடித்திருக்கிறார்.

கேப்டன் மில்லர் மற்றும் தனுஷ் பற்றி சிவராஜ்குமார் கூறியதாவது,

நான் சென்னை பையன். சென்னையில் வளர்ந்தேன். அங்கு தான் படித்தேன். தனுஷை பார்க்கும்போது என்னை பார்ப்பது போன்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே நான் தனுஷ் ரசிகன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.

கேப்டன் மில்லரில் அவருக்கு அண்ணனாக நடித்திருக்கிறேன். ஜெயிலரை விட கேப்டன் மில்லர் படத்தில் நான் கூடுதல் நேரம் வருவேன். என் கதாபாத்திரம் சுவாரஸ்யமானது என்றார்.

ஏன் கால்ல விழுற, அறிவில்ல, அடிமைத்தனத்தை ஏன் தொடர்ந்து செய்ற?: பா. ரஞ்சித்தின் வைரல் வீடியோ

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிட்டார் சிவராஜ்குமார். ரஜினியை வைத்துக் கொண்டே அவர் மாஸாக நடித்தது தான் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் தான் கெத்து காட்டியதை கன்னட டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடித்துக் காட்டினார் சிவராஜ்குமார். அதை பார்த்து அரங்கில் இருந்த அனைவரும் விசில் அடித்து, கைதட்டி பாராட்டினார்கள்.

ஜெயிலர் வெளியானதில் இருந்து சிவராஜ்குமாரை ஷிவாண்ணா என்று கொண்டாடுகிறார்கள் தமிழ் ரசிகர்கள். ஜெயலிரை அடுத்து கேப்டன் மில்லரில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.