புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்தவர் சுக்ஜீத் சிங். இவர் கொரியாவின் பூசன் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்தார். அந்நாட்டைச் சேர்ந்த கிம் போ நி என்ற பெண்ணும் அதே ஓட்டலில் பில்லிங் கவுன்ட்டரில் வேலையில் சேர்ந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்நிலையில், குடும்ப சூழல் காரணமாக இந்தியாவுக்கு திரும்பி வர வேண்டிய கட்டாயம் சுக்ஜீத்துக்கு ஏற்பட்டது. இதனால், பிரிவின் துயரத்தை தாங்க முடியாத 23 வயதான கொரியா பெண் கிம் போ உடனடியாக தனது காதலனை தேடி இந்தியாவுக்கு புறப்பட்டார். கொரிய காதலியை தனது வீட்டில் திடீரென பார்த்த சுக்ஜீத்துக்கு பெருமகிழ்ச்சி. இதையடுத்து, இருவரும் குருத்துவாராவில் திருமணம் செய்து கொண்டனர்.கொரியாவில் தனது மனைவியுடன் குடியேறவுள்ளதாக சுக்ஜீத் தெரிவித்துள்ளார்.
ஆனால், கிம் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று சுக்ஜீத் தாயார் விரும்புகிறார்.