கேப்டன் விஜயகாந்தால் தனுஷ் வீட்டில் ஒரு டாக்டர்: அவர் குணம் யாருக்கு வரும்!

கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம்
மேலும் விஜயகாந்த் நடித்த படங்களின் வீடியோக்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் தமிழக சட்டசபையில் தைரியமாக கேள்வி கேட்டது, ஆவேசப்பட்டது குறித்தும் பேசுகிறார்கள். கேப்டனுக்கு இருக்கும் தைரியம் வேறு யாருக்கும் வராது என்கிறார்கள் ரசிகர்கள்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

அதே சமயம் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் வீட்டோடு இருப்பதை நினைத்து ரசிகர்கள் கவலைப்படவும் செய்கிறார்கள். கேப்டன் பழையபடி திரும்பி வர வேண்டும், அதை பார்த்து சந்தோஷப்பட வேண்டும். அந்த நாள் என்று தான் வருமோ என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் பெயரை சொன்னாலே அவர் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி செய்வது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அவர் அப்படி செய்த உதவியால் தான் தனுஷ் வீட்டில் இன்று ஒரு டாக்டர் இருக்கிறார். அது பற்றி ரசிகர்கள் இன்று பேசுகிறார்கள்.

தனுஷின் பெரிய அக்கா பல் மருத்துவர். இரண்டாவது அக்கா கார்த்திகா பிரபலமான மகப்பேரு மருத்துவர் ஆவார். கார்த்திகாவுக்கு டாக்டர் சீட் வாங்கிக் கொடுத்தவர் விஜயகாந்த். இந்த தகவலை அவர் வெளியே சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார். அது தானே கேப்டனின் குணம்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

தன் மகளை மருத்துவராக்க உதவியவர் விஜயகாந்த் என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா தான் உணர்ச்சி மிகுதியால் தெரிவித்தார்.

டாக்டர் ஆகும் ஆசையில் தேர்வு எழுதிய கார்த்திகாவுக்கு கட் ஆஃப் மார்க்கில் ஒரு மார்க் குறைவாக இருந்தது. அப்போ நான் டாக்டர் ஆக முடியாதா என கார்த்திகா அழுதிருக்கிறார்.

அந்த நேரம் கஸ்தூரி ராஜா வீடு வழியாக சென்ற விஜயகாந்த் கார்த்திகாவின் அழுகை சப்தம் கேட்டு வந்திருக்கிறார். நடந்ததை கஸ்தூரி ராஜா விவரிக்க விஜயகாந்த் சட்டென்று ராமசந்திரா மருத்துவமனையின் தலைமை உடையாருக்கு போன் செய்து பேசி ஒரு சீட் கேட்டிருக்கிறார்.

தேசிய விருதுகள் பாரபட்சமானது: சரியாக சொன்னார் ஏ.ஆர். முருகதாஸ் என பாராட்டும் ரசிகாஸ்

கார்த்திகாவை நேரில் வருமாறு உடையார் சொல்ல அதை கஸ்தூரிராஜாவிடம் தெரிவித்தார் விஜயகாந்த். உங்க பொண்ணுக்கு கண்டிப்பா சீட் கிடைக்கும், உடையாரை நேரில் போய் பாருங்கள் என்று கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார் விஜயகாந்த். அவர் சொன்னது போன்று உடையாரை பார்த்து எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிப் படித்து மருத்துவராகிவிட்டார் கார்த்திகா.

அது மட்டும் அல்ல நடிகர் சங்கத்தின் சிறந்த தலைவர் விஜயகாந்த் தான் என நடிகர் அப்பாஸ் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தது பற்றியும் பேசப்படுகிறது. நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது ரஜினிகாந்த், கமல் ஹாசன் முதல் இளம் நடிகர்கள், நடிகைகள் வரை பலரையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்.

விமானம் முழுக்க நடிகர்கள், நடிகைகளாக சென்றதை நினைவுகூர்ந்தார் அப்பாஸ். சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை அனைவரையும் அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தியது சாதாரண விஷயம் இல்லை என அப்பாஸ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.