இந்தியாவில் ஜி20 மாநாடு: ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க மாட்டார்| Russian President Putin wont attend G20 India Summit in person, says Kremlin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: இந்தியாவில் நடக்கும் ஜி20 அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்க வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டில் இந்தியா தலைமை வகித்து வருகிறது. இந்த அமைப்பின் பல்வேறு மாநாடுகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் நடக்கும் டில்லியின் பிரகதி மைதானத்தில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பைடன் செப்., 7 ல் டில்லி வர உள்ளார்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க விளாடிமிர் புடின் பங்கேற்க டில்லி வரும் திட்டம் ஏதும் இல்லை என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளில் அவர் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் நடந்த ‛பிரிக்ஸ்’ அமைப்பு மாநாட்டிலும் புடின் நேரடியாக பங்கேற்கவில்லை. மாறாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அவர் பங்கேற்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.