திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கண்ணூர் அருகே மையில் பகுதியைச் சேர்ந்தவர் தினேசன் 53. மையில் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சஜீவன் 55. இவரை வீட்டுக்கு வரவழைக்கும் எஸ்.ஐ., சேர்ந்து மது குடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இதுபோல் இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ.,தினேசன் ,சஜீவனை இரும்புக்கம்பியால் அடித்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
தினேசன் கைது செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement