ஒரு வழியா இறங்கி வந்த சீமான் – திமுக கூட்டணிக்கு ஓகே – ஆனா ஒரு கன்டீஷன்!

கூட்டணி, அண்ணாமலை மீது விமர்சனம் என பல்வேறு கருத்துக்களை

கரூரில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

, வரவுள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் கட்சி பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்

சீமான் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன், எனக்கு துணையாக நின்று அவரும் சண்டையிட வேண்டும் என்று நினைக்கிறார். கட்சி ஆரம்பித்தால் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பினால் வரவேற்பேன். நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது அவரது விருப்பம், அதனை தவறு என்று சொல்ல முடியாது. அவரை சுதந்திரமாக வாழ விடுங்கள். எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டின் பெருமை ரஜனிகாந்த், மனித மான்பை அவர் கடைபிடித்து வருகிறார் என்று கூறினார்.

அண்ணாமலைக்கு கேள்வி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழலை பற்றி பேசுகிறாரே தவிர அதிமுகவின் ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பிய சீமான், “பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த கட்சி புனித கட்சி ஆகிவிட்டதா? கொடநாடு கொலை வழக்கை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை. நேர்மையானவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும்” என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜிக்காக வருந்துகிறேன்

செந்தில் பாலாஜியை என் தம்பி, அவரை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது, தனிப்பட்ட முறையில் அவர் சிறையில் இருப்பது எனக்கு வருத்தம். அமலாக்கத் துறை தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும் ஆனால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த விஷயத்திற்கு இப்போது ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள். உங்கள் வேண்டும் என்றால் ஒன்று.. வேண்டாம் என்றால் ஒன்றா.? குற்றம் நடந்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.

திமுகவுடன் கூட்டணிக்கு தயார்

காவிரி விவகாரம் குறித்து பேசிய சீமான், “மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சர். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத

கட்சிக்கு எதற்காக நீங்கள் சென்று வாக்கு கேட்டீர்கள். ஜெயலலிதாவாக இருந்திருந்தால் காவிரியில் கர்நாடகா தண்ணீர் தராவிட்டால் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என அறிவித்திருப்பார்.

தமிழ்நாட்டு நலனுக்கான நீங்கள் நில்லுங்கள். காங்கிரஸை கூட்டணியில் இருந்து தூக்கிவீசுங்கள். தேர்தல் போட்டியிலிருந்தே நான் விலகிக்கொள்கிறேன். ஒரு சீட் கூட வேண்டாம், திமுக கூட்டணிக்கு வந்துவிடுகிறேன், ஆதரவாக இருந்து ஊர் ஊராக சென்று பரப்புரை செய்கிறேன்” என்றவர், நாங்கள் எதையும் எதிர்க்கக் கூடாது, திமுகவை எதிர்த்தால் சங்கி என்று முத்திர குத்துவீர்கள் என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.