பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது. அதில், நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயனாளிகளுக்கு குறைக்கப்படும் 200 ரூபாயை, மத்திய அரசே நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இதன் மூலம் நாடு முழுவதும் 10 கோடி பேர் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்திருக்கும், நமது பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2022-ம் ஆண்டு மே மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ரூ.200 மானியம் நீட்டிக்கப்பட்டது.

இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள். இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503-ல் கூறிய ஊழல் தி.மு.க, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்” என தி.மு.க அரசைச் சாடியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY