மும்பை: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இக்கூட்டம் குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மும்பையில் நடைபெறும் ‘இண்டியா’ கூட்டத்தில் சோனியா பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் கூட்டணியின் இலச்சினை வெளியிடப்படும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய தங்கள் செயல்திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதிப்பார்கள்” என்றார்.