
காட்டானாக மாறும் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோவாக மட்டும் அல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். தற்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் புதிய வெப் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு உசிலம்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடருக்கு 'காட்டான்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தில் இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.