குட்டி மலிங்கா போல் வந்தாச்சு அச்சுஅசலா குட்டி அக்தர் – நடை உடை அப்படியே இருக்கே!

மிரட்டிய சோயிப் அக்தர்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பல ஆண்டுகளாக கோலோச்சினார். அவரின் புயல் வேகம் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும். கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெய்சூரியா, ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகியோரே எதிர்கொள்ள அஞ்சிய பந்துவீச்சாளராக இருந்தார். அவரின் புயல் வேக தாக்குதலுக்கு ஈடு கொடுத்து நிற்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணமல்ல. அவரின் ஓய்வுக்குப் பிறகு அவரைப் போல இன்னொரு பந்துவீச்சாளரை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அசலாக வந்திருக்கும் இம்ரான் முகமது

 pic.twitter.com/wZ8nPQcFmV

— Nibraz Ramzan (@nibraz88cricket) September 6, 2023

ஆனால் அந்த குறையைப் போக்க இப்போது ஒரு பந்துவீச்சாளர் வந்துவிட்டார். ஓமன் நாட்டைச் சேர்ந்த இம்ரான் முகமது, ஏறத்தாழ சோயிப் அக்தரைப் போலவே உயரம், முடி, பந்துவீசும் ஸ்டைல் என எல்லாமே ஒத்துப் போகிறது. பவுண்டரி லைனில் இருந்து ஓடி வந்துவீசும் அவரின் பந்தை எதிர்கொள்ள ஓமன் நாட்டு வீரர்களும் அஞ்சுகின்றனர். அந்தளவுக்கு துல்லியமாக வீசுவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 26 வயதாகும் முகமது இம்ரான் இதுவரை 33 உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளையும் 126 ரன்களையும் எடுத்துள்ளார். அதேபோல உள்ளூர் அளவிலான t20 கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 32 விக்கெட்டுகளையும் 409 ரன்களையும் எடுத்துள்ளார். 

குட்டி மலிங்கா

இலங்கையின் ஸ்டார் பிளேயர்களில் ஒருவராக இருந்தவர் மலிங்கா. அவரின் பந்துவீச்சு ஸ்டைல் மற்றும் துல்லியமாக வீசும் திறனால் மிக குறுகிய காலத்தில் உலகளவில் புகழ்பெற்றார். மலிங்கா தலைமையில் இலங்கை அணி உலக கோப்பையும் வென்று அசத்தியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களிலும் அவர் உட்சபட்ச புகழை அடைந்தார். அவரின் அசல் போல் வந்திருப்பவர் தான் பத்திரனா. இப்போது இலங்கை அணியின் பந்துவீச்சாளராக இருக்கும் அவர், கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான பவுலராக இருந்தார். பத்திரனா எப்படி மலிங்கா சாயலில் கவனத்தை ஈர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்றிருக்கிறாரோ, அவரைப் போலவே முகமது இம்ரானும் விரைவில் கிரிக்கெட் உலகில் பேசப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.