பெண் விருது வேண்டாம்.. ஆண் விருது கொடுங்கள் ; சர்ச்சையாக பேசிய நடிகருக்கு குவியும் கண்டனம்

மலையாள திரையுலகில் 53வது கேரள அரசு திரைப்பட விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அப்பன் என்கிற படத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த ஜூரி விருது குணச்சித்திர நடிகர் அலான்சியர் லே லோபஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றபோது, “எங்களுக்கு பெண் வடிவத்தில் இருக்கும் விருதுகளை தந்து தூண்ட வேண்டாம். ஆண்மையுடன் கம்பீரமாக இருக்கும் நமது கேரள முதல்வர் போல ஆண்மைத்தனம் கொண்ட விருதுகளை வழங்குங்கள். அப்படி ஒரு விருது பெறும்போது நான் நடிப்பை விட்டே ஓய்வு பெற்றுவிடுவேன்” என்று கூறினார்.

கேரள அரசு திரைப்பட விருதுகள் பெண் சிற்பங்களின் வடிவில் தான் கொடுக்கப்படுகின்றன. இதனாலேயே இவர் அப்படி ஒரு முதல்வர் முன்னிலையில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிவிட்டார் என கூறி இவரது பேச்சுக்கு மிகவும் விமர்சனங்களும் கண்டனங்களும் வருகின்றன. ஆனாலும் நான் பேசியதில் ஒன்றும் தவறு இல்லை என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் கூறி உள்ளார் அலான்சியர் லே.

இதற்கு முன்னதாக இதே போன்று விருது வழங்கும் விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் இவர் சர்ச்சையாக பேசி உள்ளதுடன், மீ டு விவகாரத்தில் ஒரு இளம் நடிகையால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பின்பு அவரிடம் மன்னிப்பு கேட்டு அந்த வழக்கிலிருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.