மணிப்பூர் மக்கள் கடந்த சில மாதங்களாகவே பெரும் கலவரத்தை சந்தித்து வருகின்றன. கலவரத்தால் ஆயிரக்கணக்கான மணிப்பூர் மக்கள் தங்களது உடைமைகளையும், வீடுகளையும் இழந்து வாழ்வாதாரமின்றி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பண நெருக்கடிகளை சமாளிப்பதற்கும் அங்குள்ள பெண்களுக்கு பொம்மைகளை தயாரிக்க பயிற்சி வழங்கி வருகிறது சிங்கப்பூரைச் சேர்ந்த `1 மில்லியன் ஹீரோஸ்’ (1 Million Heroes) என்ற நிறுவனம்.

தற்போது இந்த நிறுவனம் மணிப்பூரிலுள்ள ஐந்து நிவாரண முகாம்களில் பயிற்சி அளித்துவருகிறது. முகாம்களில் இருக்கும் ஆர்வமுள்ள பெண்களுக்கு, அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, உலகச் சந்தையில் விற்பனையியுள்ள பிராண்டான `அமிகுருமி’ (amigurumi) என்ற பொம்மைகளை தயாரிக்கும் பயிற்சியை பொம்மை கலைஞரும், பயிற்சியாளருமான உத்பலா லாங்ஜாம் என்பவரின் மூலம் வழங்கி வருகிறது. அமிகுருமி என்பது சிறிய அடைத்த (stuffed toys) பொம்மைகளை வடிவமைக்கும் ஜப்பானிய கலை.
அவை நூல்களைக் கொண்டு குறிப்பிட்ட கதாபாத்திரம் கொண்ட பொம்மை வடிவங்களை ஊசி மூலம் பின்னி அதன் இடைகளில் பருத்திப்பஞ்சு போன்றவற்றைக் கொண்டு அடைத்து பொம்மை உருவில் தயாரிப்பதாகும். இந்தப் பயிற்சிக்கு தேவையான மூலப்பொருட்கள், கருவிகள் போன்றவற்றை `1 மில்லியன் ஹீரோஸ்’ நிறுவனமே வழங்கி வருகிறது. இந்த பயிற்சிகளில் நாய், பூனை, புலி, கரடி,மனித வடிவ பொம்மைகள் தயாரிக்க பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு, விற்பனையின் பெரும் பகுதி அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல் மணிப்பூர் அரசாங்கத்தின் சார்பில் மணிப்பூர் மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் நிவாரண முகங்களில் உள்ளவர்கள் ஊதுபத்தி, துணி, சோப்பு, பாத்திரங்களை கழுவ பயன்படும் திரவம், காகித பைகள் போன்றவற்றை தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
நிவாரண முகாம்களில் தயாரிக்கப்படும் அனைத்து பொருள்களையும் மணிப்பூர் கைத்தறி மற்றும் கைவினைக் கழகம் உரிய விலைக்கு வாங்கிக்கொல்லும் என மணிப்பூர் அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை ஆணையர் அறிவித்திருக்கிறார். கலவரம் ஓயாத இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், பயிற்சி திட்டத்தில் கிடைக்கும் சிறிய வருமானம் எங்களது நிதி நெருக்கடியை சமாளிக்க உதவுவதாக பயிற்சி பெறும் பெண்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY