பிரபல கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியரான துல்கர் சல்மான்

மலையாளத்தில் முன்னணி நடிகராக நடித்து வரும் துல்கர் சல்மான் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் பிரபலமாகிவிட்டார். அதனால் மிகப்பெரிய நிறுவனங்கள் அவரை தங்களது விளம்பர மாடலாகவும் தூதுவராகவும் நியமிக்க விருப்பம் காட்டி வருகின்றன. ஒருவேளை அவர் சினிமாவிற்கு வராவிட்டால் மிகப்பெரிய கார் விரும்பியாக மாறி இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு தனது தந்தை மம்முட்டியைப் போலவே விதவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் மிக்கவர் துல்கர் சல்மான். குறிப்பாக கடந்த 2017ல் போர்சே பனமேரா டர்போ கார் ஒன்றை வாங்கினார். அப்போது முதல் அவருக்கு போர்சே கார்கள் மீது தனி ஈடுபாடு ஏற்பட்டு விட்டது.

தற்போதும் புதிய மாடல் போர்சே கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார் என்றே தெரிகிறது. அவரை பெருமைப்படுத்தும் விதமாக போர்சே கார் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமாக வெளியிடும் கிறிஸ்டோபோரஸ் என்கிற மாதாந்திர இதழில் தற்போது துல்கர் சல்மானின் புகைப்படத்தை அட்டைப்படமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிடும் 408வது இதழ் இது. இத்தனை வருடங்களில் முதன்முறையாக இந்த இதழில் இடம்பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை துல்கர் சல்மான் பெற்றுள்ளார் என்பது தான் இதில் ஹைலைட் டே.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.