ICC World Cup 2023, IND vs PAK: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இன்று (அக். 14) நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதலில் பந்துவீசி பாகிஸ்தானை 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் மட்டும் பாகிஸ்தான் எடுத்திருந்த நிலையில், அடுத்த 36 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.
ஹாட்ரிக் வெற்றி
இந்தியா அணி பந்துவீச்சாளர்கள் சிராஜ், பும்ரா, குல்தீப், ஹர்திக், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக, பும்ரா 7 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். பந்துவீச்சை போலவே பேட்டிங்கிலும் இந்தியா சிறப்பாக விளையாடியது. 30.3 ஓவர்களிலேயே இந்தியா 192 ரன்கள் என்ற இலக்கை எட்டி தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ரோஹித் விளாசல்…
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 86 ரன்களை அடித்திருந்தார். அவர் 63 பந்துகளில் தலா 6 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் அடித்தார். மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் உலகக் கோப்பை அரைசதத்தை பதிவு செய்திருந்தார். சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் தலா 16 ரன்களையும், கேஎல் ராகுல் 19 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றார்.
#INDvsPAK | ‘வந்த இடம் என் காடு…’ பாகிஸ்தான் தான் பலியாடு#CWC23 | #INDvPAK | #WorldCup2023 | #WorldCup | #TeamIndia | #Victory | #ZeeTamilNews
Android Link: https://t.co/9DM6X6ZLY6
Apple Link: https://t.co/3ESH9sHwd3 pic.twitter.com/k8r5kOcQT8
— Zee Tamil News (@ZeeTamilNews) October 14, 2023
தொடரும் ஆதிக்கம் 8-0
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலக் கோப்பை வரலாற்றில் 8ஆவது முறையாக பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. இதன்மூலம், உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற பெருமையை இந்தியா தக்கவைத்தது.
Pakistan lose 8/36
Rohit slams 86
Hosts go top of the table
The huge match in Ahmedabad went India’s way.
Read the full reporthttps://t.co/24Bi5qUy8c
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 14, 2023
புள்ளிப்பட்டியலில் முதலிடம்
தொடர்ந்து, பெரிய ரன்ரேட்டில் வெற்றிப்பெற்றதை அடுத்து, புள்ளிப்பட்டியலிலும் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மூன்றாவது, நான்காவது இடத்தில் முறையே தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளது.