சென்னை இதுவரை இஸ்ரேலிலிருந்து 61 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகத்துக்கு வந்துள்ளனர் இன்று தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழக முதல்வர் ஆனைக்கிணங்க தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. நேற்று 13.10.2023 அன்று முதற் கட்டமாக புது டெல்லி வந்த 21 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழக அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர். […]
