மதுரை இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்குகிறது. ஆண்டு முழுவதும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும். இவற்றில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இதில் இன்று நவராத்திரி உற்சவ விழா 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை […]