சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக 7வது சீசனில் நுழைந்துள்ளது. 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனையும் சிறப்பாக துவங்கி நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 7வது ஆண்டாக ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
