
'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' 2ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவக்கம்
மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், ஷனாயா கபூர், ரோஷன் மேகா ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்'. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை நந்தகிஷோர் என்பவர் இயக்கி வருகிறார். அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தி பிரமாண்ட ஆக்சன் என்டர்டெய்னராக இப்படம் தயாராகிறது.
இதன் 2ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது. நவராத்திரியை முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது.