வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நைரோபி: கென்யாவில் ஒருவர் வக்கீலுக்கு படிக்காமலேயே 26 வழக்குகளில் வாதாடி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அவர் போலி வக்கீல் என்பது தற்போது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கென்யா நாட்டை சேர்ந்தவர் பிரையன் மிவென்டா. இவர் சட்டம் படிக்காமலேயே வக்கீலாக வாதாடி 26 வழக்குகளில் வெற்றிப்பெற்றுள்ளார். இத்தனை வழக்குகள் வாதாடி பிறகு இப்போது தான் அவர் போலி வக்கீல் என்பதை கண்டறிந்துள்ளனர்.
அந்த போலி வக்கீல், 26 வழக்குகளையும் மாஜிஸ்திரேட்டுகள், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வாதிட்டு வென்றுள்ளார் என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.
பிரையன் மிவென்டா கைதாகும் வரை, இவர் மீது யாருக்கும் துளியளவு கூட சந்தேகம் வரவில்லையாம். அந்த அளவிற்கு திறமையாக வாதாடியுள்ளார். கென்யாவின் லா சொசைட்டியின் நைரோபி கிளையின் ரேபிட் ஆக்ஷன் டீமுக்கு பல பொதுப் புகார்கள் வந்துள்ளது.
இதனையடுத்தே அவரை கைது செய்தனர். அப்போது தான் அவர் போலி வக்கீல் என்பதை கண்டறிந்துள்ளனர். வக்கீலுக்கு படிக்காமலேயே வழக்குகளில் வாதாடி வெற்றிப்பெற்ற பிரையன் மிவென்டாவுக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement