Pixel 8 Pro vs iPhone 15 Pro Max: இதில் எதை நம்பி வாங்கலாம்…? முழு விவரம்

Google Pixel 8 Pro Bend Test: கூகுள் நிறுவனத்தின் புதிய  ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 8 ப்ரோ, அதன் முந்தைய மாடல்களை விட அதிக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும், கூகுள் பிக்சல் 8 ப்ரோ அதன் ஹார்ட்வேர் மற்றும் புதிய சாஃப்ட்வேர்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜெர்ரிரிக் எவ்ரிதிங் என்றழைக்கப்படும் ஜாக் நெல்சன், சமீபத்தில் கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) மொபைலை சோதித்து, அது மிகவும் வலிமையானதாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார் எனலாம். இரும்பால் அதனை சுரண்டி பார்த்தது மட்டுமின்றி கத்தியால் மொபைலின் திரையை கீற முயற்சி மேற்கொண்டார். ஆனால் அந்த மொபைலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இதன் வீடியோவையும் அதன் அவரது யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

பெண்ட் டெஸ்ட்

கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஒரு புதிய 6.7-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது. அதாவது, இந்த மொபைலின் திரை மிகவும் வலிமையானது, எளிதில் உடையாதது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதில் கீறல் ஏற்படுவதோ அல்லது உடைவதோ ஏற்படாது என கூறப்பட்டது. ஜெர்ரிரிக் எவ்ரிதிங் மொபைலை வளைத்து பார்க்கும் சோதனையில் (Bend Test), கூகுள் பிக்சல் 8 ப்ரோ சுரண்டல் சோதனைகளில் அதன் மற்ற மொபல்களை போலவே செயல்பட்டது.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ vs ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஒரு உறுதியான உலோக ஃப்ரேமை கொண்டுள்ளது. அது மொபைல் வளையாமல் பார்த்துக்கொள்ளும். ஜெர்ரிரிக் எவ்ரிதிங் நடத்திய சோதனையில், கூகுள் பிக்சல் 8 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை (Apple iPhone 15 Pro Max) விட சிறப்பாக செயல்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை வளைக்க ஜாக் நெல்சன் அழுத்தம் கொடுத்தபோது, தொலைபேசியின் பின் கண்ணாடி உடனடியாக உடைந்தது. பிக்சல் 8 ப்ரோவும் அசாதாரண ஒலிகளை எழுப்பியது, ஆனால் இறுதியில் அந்த சோதனையில் அது தோல்வியடையவில்லை. 

ஜெர்ரிரிக் எவ்ரிதிங் வெளியிட்ட வீடியோ

நீங்கள் பிக்சல் 8 ப்ரோவை வாங்கத் திட்டமிட்டிருந்தால், அதன் உறுதியான உருவாக்கத் தரத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை இந்த வீடியோ மூலம் நீங்கள் புரிந்துகொள்ளலாம். கூகுள் இந்தச் சாதனத்தில் நல்ல உதிரி பொருட்கள் மற்றும் உற்பத்தி நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, இது நீடித்து நிலைத்திருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். 

கூடுதல் சிறப்பம்சங்கள்

கூடுதலாக, கூகுள் பிக்சல் 8 ப்ரோவில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் போன்ற வளைந்த டிஸ்ப்ளே இல்லை. இது விரிசல் ஏற்படுவதைத் தடுக்கிறது. பிக்சல் 8 ப்ரோ அலுமினியம் மற்றும் கண்ணாடியால் ஆனது. அலுமினிய சட்டகம் வலுவானது மற்றும் நீடித்தது. அதே நேரத்தில் கண்ணாடி பின்புற பேனல் பளபளப்பாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். கூகுள் பிக்சல் 8 ப்ரோ IP68 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது, அதாவது இது தண்ணீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாக்கப்பாக இருக்கும்.

விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் பிக்சல் 8 ப்ரோவின் விலை 1 லட்சத்து 6 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இது விலையுயர்ந்த மொபைல். ஆனால் வலுவான மற்றும் நீடித்த சாதனத்தைத் தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல மாடல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.