Smartphone: இது இந்தியாவின் பண்டிகைகளின் காலம். விஜய தசமி, சரஸ்வதி பூஜை என தசாரா பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களால் பல வழிகளில் கொண்டாடப்படும். இதில் மக்கள் பண்டிகையை கொண்டாட பல்வேறு வழிபாட்டு முறைகளையும், இனிப்புகளை செய்தும் தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக, தங்களுக்கோ அல்லது ஒட்டுமொத்த வீடுகளுக்கோ தேவையானவற்றை இந்த பண்டிகை காலத்தில்தான் அதிகமானோர் வாங்க விரும்புவார்கள்.
புதிய மொபைல் இன்று அறிமுகம்
இதனாலேயே இந்தியாவில் இந்த பண்டிகை காலத்தில் பல தள்ளுபடிகள் மற்றும் அதிரடி விற்பனைகளும் நடைபெறும். சமீபத்தில் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தங்களது விற்பனையை தொடங்கி நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், இயட்பாட்கள், ஹெட்போன்கள், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை தள்ளுபடி விலையில் கிடைத்தன. மேலும், பலரும் இதில் தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்து வாங்கினர்.
தற்போது இதுபோன்ற தள்ளுபடி விற்பனைகள் நிறைவடைந்தாலும், ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை பல நிறுவனங்கள் தங்களின் புது மாடல் மொபைல்களை இப்போது அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், itel நிறுவனம் தனது புதிய மாடல் மொபைல் ஒன்றை இந்தியாவில் இன்று (அக். 16) அறிமுகப்படுத்தி உள்ளது. itel நிறுவனம் தனது புதிய A05s மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
விலை என்ன தெரியுமா?
இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட itel நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். itel A05s மொபைலின் விலை ரூ. 6 ஆயிரத்து 499 ஆகும். இது இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் முக்கியமான மாடலாகும்.
கேமரா மற்றும் பேட்டரி
itel A05s மொபைல் ஆனது LED ப்ளாஷ் கொண்ட 5MP பின்புற கேமராவை கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக, சாதனத்தில் 5MP முன் கேமரா உள்ளது. பாதுகாப்பிற்காக, itel A05s மாடலில் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது. பேட்டரி திறன் 4,000mAh. இதன் கனெக்ட்டிவிட்டியை பார்த்தால் 4G LTE, Wi-Fi, Bluetooth, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் USB Type-C சார்ஜிங் போர்ட் ஆகியவை அடங்கும்.
சிறப்பம்சங்கள்
இந்த மொபைலில் HD+ தெளிவுத்திறனுடன் (Resolution) 6.52-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2GB RAM மற்றும் 32உழ இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைந்து Octocore பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 Go பதிப்பில் இயங்குகிறது.
itel A05s மொபைலில் வாட்டர் டிராப் வடிவ நாட்ச், நிலையான 60Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate) மற்றும் 270 PPI பிக்சல் அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நெபுலா பிளாக், மெடோ கிரீன், கிரிஸ்டல் ப்ளூ மற்றும் க்ளோரியஸ் ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது.