புதுடெல்லி,
மோடி அரசு தனது திட்டங்களின் ஊழல்களை மறைப்பதற்கு, தலைமை கணக்கு தணிக்கையாளர் போன்ற சுயேச்சை அமைப்பு அதிகாரிகளின் வாயை அடைக்க முயல்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மோடி அரசின் பாரத்மாலா திட்டம், துவாரா விரைவுச்சாலை மற்றும் ஆயுஷ்மான் திட்ட முறைகேடுகளை சுட்டிக்காட்டிய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலக அதிகாரிகள் 3 பேர், முறையற்ற வகையில் தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
Related Tags :