சென்னை: விஜய்யின் லியோ வெற்றி விழா கொண்டாட்டம் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில், விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், லியோ சக்சஸ் மீட்டில் பங்கேற்ற மிஷ்கின், விஜய் பற்றி பேசியது வைரலாகி வருகிறது.
