நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், மிஸ்கின், நடிகை த்ரிஷா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் விஜய் வழக்கம் போல தனது தனித்துவமான ஸ்டைலில் குட்டிக் கதையைக் கூறினார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களான மிர்ச்சி விஜய்யும், டிடியும் விஜய்யிடம் ரேபிட் பையர் பாணியில் சில கேள்விகளை கேட்டனர்.

கல்வி என்கிற கேள்விக்கு விஜய்,” எல்லோருக்கும் சரிசமமாக ஏற்ற தாழ்வு இல்லாம கிடைக்கிறது.” எனக் கூறினார்.
மக்கள் என்கிற கேள்விக்கு விஜய் ,” புடிச்ச தட்டி கொடுப்பாங்க, புடிக்கலைனா தட்டி விட்ருவாங்க.” என பதிலளித்தார்.
எம்.ஜி.ஆர் என்கிற கேள்விக்கு விஜய்,” இதுவரை தோல்வி காணாத தலைவர்.” எனக் கூறினார்.
இறுதியாக , 2026 என கேட்ட கேள்விக்கு விஜய்,” 2026…2025க்கு அப்புறம் வர்ற வருஷம்.” என பதிலளித்தார். “வேற எதாவது சீரிஸாக கேட்கிறோம் ணே….” எனக் கேள்வியைத் தொடர்ந்தார். இதற்கு விஜய் ,” 2026ல ஃபுட்பால் வொர்ல்ட் கப் வருது, நீ வேணா செக் பண்ணி பாரு ப்ரோ.” எனக் கூற மேலும் கேள்வியை தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் தொடர்ந்தார். இறுதியாக ,” கப்பு முக்கியம் பிகிலு” என விஜய் கூற அரங்கமே கரகோஷத்தால் நிரம்பியது.

மேலும், இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விஜய் அரசியலுக்கு வருவதைத் தான் குறியீடாக் கூறுகிறார் என பதிவிட்டு வருகின்றனர்.