நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா இன்று(நவ., 2) உடல் நலக்குறைவால் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

1975 முதல் தமிழ் சினிமாவில் நடிகராக நடித்து வந்த ஜூனியர் பாலையா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‛‛கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், வின்னர், கும்கி, சாட்டை, புலி மற்றும் நேர்கொண்ட பார்வை'' ஆகிய படங்கள் முக்கியமானவை. ஆரம்பகாலத்தில் நகைச்சுவை வேடங்களிலும் பின்னர் குணச்சித்ர வேடங்களிலும் நடித்தார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள இவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் இறுதிச்சடங்கு நடக்கிறது. இவர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.