போக்கோ C65 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

சென்னை: சர்வதேச சந்தையில் போக்கோ C65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது போக்கோ C65 ஸ்மார்ட்போன் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.74 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
  • 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
  • மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.10,700 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.