கத்திமுனையில் பாலியல் தொல்லை; பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய இன்ஜினீயர்- `பகீர்' குற்றப் பின்னணி!

8.11.2023-ம் தேதியிட்ட ஜூனியர் விகடனில் `பெண்கள் விடுதி… பாலியல் சீண்டல்… உள்ளாடைத் திருடும் சைக்கோ இளைஞன்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில் சென்னை கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் உள்ளாடைகள் அடிக்கடி திருடப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தோம். அதோடு, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கத்திமுனையில் மிரட்டிப் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் மூர்த்தி மேற்பார்வையில் துணை கமிஷனர் பவன்குமார், உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தமிழ் பிரபு

தனிப்படை போலீஸார் உள்ளாடைத் திருடன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வரும் இளைஞர் குறித்து விசாரித்தனர். சம்பவம் நடந்த இடங்களிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த இளைஞர், இரும்புலியூர் பகுதிக்குச் செல்வதை தனிப்படை போலீஸார் சிசிடிவி மூலம் கண்டறிந்தனர். உடனடியாக அந்தப் பகுதியை தனிப்படை போலீஸார் நோட்டமிட்டபோது, சிசிடிவி-யில் பதிவான இளைஞர் ஓர் வீட்டுக்குள் செல்வதைக் கண்டறிந்தனர். அங்கு சென்று அந்த இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் தமிழ் பிரபு (26) என்றும் தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. பின்னர், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், பெண்களின் உள்ளாடைகளைத் திருடியதும் அவர்தான் என்பது தெரியவந்தது. அதையடுத்து, அவரை சேலையூர் காவல் நிலையத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு அழைத்து வந்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தனிப்படை போலீஸார் நம்மிடம் பேசுகையில், “பாலியல் சீண்டல் தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் வந்திருக்கின்றன. அதன்பேரில் விசாரணை நடத்தியதில், தமிழ் பிரபு சிக்கிக் கொண்டார். இவர் டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்துவிட்டு, வேலைத் தேடி சென்னைக்கு வந்திருக்கிறார். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். சரியான வேலை கிடைக்காததால் தமிழ் பிரபு, ஆக்டிங் டிரைவராக வேலைப்பார்த்து வந்திருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், தமிழ் பிரபு தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அந்த வீடியோக்களைப் பார்த்ததும் அவரின் மனம் மாறியிருக்கிறது. அதனால் அவர், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று, பெண்களைக் கண்காணித்து வந்திருக்கிறார்.

சிசிடிவி காட்சி

சில பெண்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீடு மற்றும் குடும்பத்தினர் குறித்து நோட்டமிட்டிருக்கிறார். இரவு நேரங்களில் ஆண்கள் வீடுகளில் இல்லை என்பதை தெரிந்துகொள்ளும் தமிழ் பிரபு, அந்த வீடுகளின் கதவைத் தட்டி கத்திமுனையில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கத்தியைக் காட்டி மிரட்டியே ஏராளமான பெண்களுக்கு தமிழ் பிரபு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட சிலர்தான் புகாராக காவல் நிலையங்களில் அளித்திருக்கிறார்கள். அதனால் தமிழ் பிரபுவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து கத்தி, செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.