வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: நவ.,19ல் நடக்கவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் பைனலை பிரதமர் மோடி நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. நேற்று (நவ.,16) நடந்த 2வது அரையிறுதியில் தென்ஆப்ரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா பைனலுக்கு தகுதிப்பெற்றது.
நாளை மறுநாள் (நவ.,19) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. போட்டிக்கு முன்னதாக நிறைவு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல சினிமா நடிகர், நடிகைகளும் பங்கேற்கின்றனர். பைனலை நேரில் பார்வையிட பிரதமர் மோடிக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி பைனலை நேரில் காண வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல், ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக 2003ல் நடந்த உலக கோப்பை பைனலில் மோதின. அதில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement