யு-டியூப் சேனல் ஆரம்பித்த நாக சைதன்யா

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா யு டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

“எனது யு டியூப் சேனலைப் பாருங்கள். இன்னும் நிறைய எக்ஸ்க்ளூசிவ் கன்டென்ட்கள் வர உள்ளன. உங்கள் அனைவரையும் மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டு அவரது சேனல் லின்க்கையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

'அக்கினேனி நாக சைதன்யா' என்ற பெயரில் அவர் ஆரம்பித்துள்ள அந்த சேனலில் முதல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஒருவர் பின்னணியில் கேள்வி கேட்க அதற்கு பதிலளித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்ததால் தாடி, முடியையும் வளர்த்துள்ளேன் என கூறிவிட்டு, அது அடுத்த படத்திற்கானது சந்து மொலேட்டி இயக்கத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரத்திற்கானது. அடுத்து அவர் நடித்து டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள 'தூத்தா' வெப் சீரிஸ் குறித்தும் பேசியுள்ளார்.

நடிகர்கள், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் மட்டும் இயங்கி வந்த நிலையில் தற்போது ஒவ்வொருவராக யு டியூப் சேனலையும் ஆரம்பித்து வருகிறார்கள். சிலர் ஆரம்பித்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள், எந்த அப்டேட்டையும் பிறகு பகிர மாட்டார்கள். நாக சைதன்யா என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.