2023 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றொரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். ரோஹித் ஷர்மா 47 ரன்களை விளாசினார்.இதன் மூலம் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரிய சாதனையைப் படைத்தார். உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் சாதனையை ரோஹித் சர்மா இந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முறியடித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் 2019 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தார். அந்த தொடரில் 11 போட்டிகளில் 578 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 2023 உலக கோப்பை போட்டியில் மொத்தம் 597 ரன்கள் எடுத்திருக்கிறார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்தார். அவர் அரை சதத்தை மையிரிலையில் தவறவிட்டார். இருப்பினும் வில்லியம்சனின் சாதனையை முறியடித்தார்.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த கேப்டன்கள் 5 பேர் மட்டுமே. இன்னும் 3 ரன்கள் எடுத்திருந்தால் 600 ரன்களைக் கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் 47 ரன்களில் வெளியேறி 600 ரன்களை 3 ரன்களில் தவறவிட்டார். ரோஹித் சர்மாவுக்கு முன், கேன் வில்லியம்சன் 2019ல் 578 ரன்களும், இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே 2007ல் 548 ரன்களும், ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 2007ல் 539 ரன்களும், ஆரோன் பின்ச் 2019ல் 507 ரன்களும் எடுத்திருந்தனர்.
உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள்
597 ரன்கள் – ரோஹித் சர்மா (2023)
578 ரன்கள் – கேன் வில்லியம்சன் (2019)
548 ரன்கள் – எம் ஜெயவர்த்தனே (2007)
539 ரன்கள் – ரிக்கி பாண்டிங் (2007)
507 ரன்கள் – ஆரோன் பின்ச் (2019)