புதுடெல்லி: டீப்ஃபேக் விவகாரம் தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சிஅடைந்து வருகிற நிலையில்,அவற்றைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போலி புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய போலி உருவாக்கங்கள் ‘டீப்ஃபேக்’ என்று அழைக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது.
இதையடுத்து போலிவீடியோக்கள், புகைப்படங்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66டி-யின்படி 3 ஆண்டு சிறைதண்டனையுடன் ரூ.1 லட்சம்அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பஅமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும், 24 மணி நேரத்துக்குள் வீடியோவை நீக்க வேண்டும் என்று சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் டீப்ஃபேக் தொடர்பாக சமூக வலைதளநிறுவனங்கள் கலந்தாலோசனை நடந்த அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.