அரசாங்கத்தினால் முதியோர்களை கௌரவிக்கும் நோக்கில் தங்களது வீடுகளில் வாழ்வதற்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலகம் தோறும் இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் அவர்களது வழிகாட்டலில் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அறுபது வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான கட்டில், மெத்தை, மின்விசிறி போன்ற பொருட்களை கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். ருவைத், கணக்காளர் ஏ.எம்.மோகன்குமார், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சுல்பிகா மற்றும் சமூக பராமரிப்பு நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான பொருட்களை கையளித்துள்ளனர்.