Amid Reports Of Mysterious Pneumonia Outbreak In China, WHO Said This | சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிம்மோனியா: அறிக்கை கேட்கிறது உலக சுகாதார அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங்: சீனாவில் உருவான கோவிட் வைரஸ் தொற்று உலகளவில் பரவி மக்களை அச்சுறுத்திய நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், இது குறித்த தகவல்களை பகிரும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

சீனாவில், சுவாச பிரச்னை கோளாறுகளுடன் பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இது தொடர்பாக சீன தேசிய சுகாதார அதிகாரிகள் கூறுகையில், கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் எதிரொலியாகவே இந்த புதிய தொற்று ஏற்பட்டுள்ளது என்றனர்.

இச்சூழ்நிலையில், சார்ஸ் கோவ் -2 வைரஸ் பரவல், இன்ப்ளூயன்சா வைரஸ் பரவல் இன்னும் பிற தொற்றுகள் ஆகியனவற்றின் நிலவரம் குறித்து தெளிவான அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார அமைப்பு சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் நிம்மோனியா தொற்று பரவுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.