
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது.?
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா, 'லால் சலாம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் டீசர் வெளியானதைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியாவதால் இதன் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் வாரத்தில் ஒரு தேதியில் நடத்த திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.