
நடிப்பு பயிற்சி பெறும் பாஷினி பாத்திமா
2020ம் ஆண்டு நடந்த 'குளோபல் மிஸ்.இந்தியா' போட்டியில் அழகி பட்டம் வென்றவர் பாஷினி பாத்திமா. சென்னையை சேர்ந்த இவர் நடிகர் ஜே.எம்.பஷீரின் மகள் ஆவார். சென்னையில் பள்ளி, கல்லூரில் படிப்பை முடித்தவர், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாக மேலாண்மை படித்தார்.
தற்போது அழகி பட்டம் வென்ற நிலையில் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு கற்று வருகிறார். நடிகை கலைராணி அவருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.