வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாரணாசி : உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தில் நடத்திய ஆய்வு குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய, மேலும், 21 நாட்கள் அவகாசம் கேட்டு, தொல்லியல் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள ஞானவாபி வளாகம் தொடர்பாக, நான்கு பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.முன்பு அமைந்திருந்த கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, ஞானவாபி வளாகம் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி அவர்கள், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக, தொல்லியல் துறை ஆய்வு செய்ய, மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, கடந்த, ஆக., 4ல் ஆய்வு துவங்கியது. ஆய்வுகள் முடிந்த நிலையில், ஆய்வறிக்கையை தாக்கல் செய்வதற்கு தொல்லியல் துறை அனுமதி கேட்டிருந்தது.
இந்த அவகாசம் முடிந்த நிலையில், மேலும், 21 நாட்கள் அவகாசம் அளிக்கக் கோரி, மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement