மாற்றுத்திறனுடைய 200 பிள்ளைகள் இன்று பாராளுமன்ற அமர்வினைப் பார்ப்பதற்காக சமூகமளித்துள்ளதாகவும், இது வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று (04) அறிவித்தார்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தினத்திற்காக, பாராளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் மன்றத்தினால் இது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
சில பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இப்பிள்ளைகளை சந்தோசமாக வரவேற்றதுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது சபாநாயகர் தெரிவித்தார்.
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுந்து, அப்பிள்ளைகளை வரவேற்றார். 2007ஆம் ஆண்டு தொடக்கம் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டளைச் சட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், கட்டளைச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.