Dussehra spends Rs 29 crore despite severe drought | கடும் வறட்சிக்கு இடையிலும் தசராவுக்கு ரூ.29 கோடி செலவு

மைசூரு : வறட்சியை பொருட்படுத்தாமல் நடப்பாண்டு மைசூரு தசராவுக்கு 29.25 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. இதுவே கடந்தாண்டு 28.74 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தாமதம்

நடப்பாண்டு கர்நாடகாவில் மழையின்மையால், பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தசராவை எளிமையாகவும், அதேவேளையில், பாரம்பரியமாக கொண்டாடவும் அரசு உத்தரவின்படி, தசரா நடத்தப்பட்டது. மைசூரில், கலெக்டர் ராஜேந்திரா அளித்த பேட்டி:

தொழில்நுட்ப காரணங்களால், செலவு தகவல் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய திருவிழாவாக, ஆடம்பரமாக நடந்திருந்தாலும், அரசிடம் கூடுதல் நிதி கேட்கவில்லை.

விளையாட்டு தசரா, மின் விளக்கு, உணவு கண்காட்சி, துாய்மை போன்றவற்றுக்கான செலவுகளை அந்தந்த துறைகள், மைசூரு மாநகராட்சியே ஏற்றுக் கொண்டன.

4 நாட்கள் மட்டுமே

கன்னடம், கலாச்சார துறை 15 கோடி ரூபாயும்; மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் 10 கோடி ரூபாயும்; நன்கொடை மூலம், 2.25 கோடி ரூபாய்; தங்க அட்டை, டிக்கெட் மூலம் 1.19 கோடி ரூபாய் உட்பட 29.26 கோடி ரூபாய் வசூலானது. இதில், யுவ தசராவுக்காக 5.9 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஏழு நாட்கள் நடந்த யுவ தசரா, இம்முறை நான்கு நாட்கள் மட்டுமே நடந்தது. பிரபலமான பின்னணி பாடகர்கள் பங்கேற்றதால், செலவு அதிகரித்தது. அழைப்பிதழ்கள், வரவேற்பு, மேடை அலங்காரம், பயண செலவு என மொத்தம், 29.25 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.