கதைப்பதற்கு மாத்திரமல்ல பிள்ளைகள் மற்றும் பெண்களுக்காக வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் அபிவிருத்திக்காக இடம்பெறும் சிறந்த முதலீடு என்பது சிறுவர்கள் மற்றும் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 8362 பிள்ளைகள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
செப்டம்பர் மாதத்தில் 166 சிறுவர்களும் ஒக்டோபர் மாதத்தில் 122 பிள்ளைகளும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறுவர் வன்முறைகள் இதை விட அதிகமாகும். 2612 பெண்களுக்கான வன்முறைகள் பதிவாகியுள்ளன. இந்நிலையைத் தடுப்பதாயின் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
விளையாட்டுத் தொடர்பாக உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், அதிகாரிகள் மாத்திரமன்றி சில அரசியல் வாதிகளும் இரண்டு பக்கத்திலிமிருந்து கொண்டு இன்று வரை விளையாட்டை இல்லாமலே ஆக்கியுள்ளனர்.
கிரிக்கெட் விளையாட்டை சீரழித்து, தமது அரசியல் அபிலாi~களை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாகவும், அவ்வாறு தொடர்ந்து இடம்பெறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.