கோல்கட்டா: கோல்கட்டா இளைஞரை கரம் பிடிக்க, பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா வந்தார். பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் ஜவேரியா கஹானூன்,25 இவருக்கும், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த சமீர் கான் என்பவருக்கும் 2024 ஜனவரியில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.’
இதையடுத்து சமீர்கானை கரம் பிடிக்க, 45 நாட்கள் விசா பெற்ற பாகிஸ்தான் பெண் ஜவேரியா கஹானூன், தனது குடும்பத்துடன் பஞ்சாபின் அட்டாரி -வாஹா எல்லை வழியாக இன்று இந்தியா வந்தார். . அவர்களை வருங்கால கணவனான சமீர் கான் வரவேற்றார். இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement