திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளிக்கு பள்ளிச்செல்லும் வயதில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மாலை நேரம், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமிகள் இருவரும், அருகே உள்ள பகுதிக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குவந்த இலங்கை தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த 23 வயது இளைஞன் விந்துஜன் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.

தனது ஆடைகளை கழற்றி அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட இளைஞனைப் பார்த்ததும், சிறுமிகள் சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு ஓடிவந்த பொதுமக்கள் இளைஞனைப் பிடித்து சரமாரியாக தாக்கி, போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ஆரணி அனைத்து மகளிர் போலீஸார் விரைந்துசென்று, இளைஞனை கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.