
வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு
சென்னை : சென்னை துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை நேற்று(டிச.,05) உடைந்தது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். 6 அடி உயர வெள்ளத்தில் ஒரு வயதான இரட்டை குழந்தைகளுடன் சிக்கினார்.
அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இன்று(டிச.,06) பத்திரமாக மீட்டனர்.